பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை பிரித்தானியா இராணுவம் இன்று திங்கள் (04) முதல் மேற்கொள்ளும்–அரசாங்கம்
.இவ்வாரத் தொடக்கத்திலிருந்து பெட்ரோல், டீசல் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.நிலைமையைத் தற்காலிகமாகச் சமாளிக்க சுமார் 200 இராணுவ வீரர்கள் எரிபொருள் விநியோகச் சேவைகளுக்கு உதவுவர் என தெரிவிக்கப்பட்டது.இதன் காரணமாக பெட்ரோல், டீசல் நிலையங்கள் மீதான நெருக்கடி சற்றுக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெரும்பாலான இடங்களில் எரிபொருள் பற்றாக்குறைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் நிலைமை மோசமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை பிரித்தானியா இராணுவம் இன்று திங்கள் (04) முதல் மேற்கொள்ளும்–அரசாங்கம்
Reviewed by Author
on
October 04, 2021
Rating:

No comments:
Post a Comment