அண்மைய செய்திகள்

recent
-

பயணப்பை சடல விவகாரம்: பிரதான சந்தேக நபர் கைது; பெண்ணின் நகைகளும் கண்டுபிடிப்பு

சப்புகஸ்கந்த மாபிம வீதியிலுள்ள குப்பை மேடு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் பயணப்பையில் கொண்டு வரப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தே கநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். 

தங்க நகைகள், பணம் மற்றும் சடலத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி என்பனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கொலைசெய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நெக்லஸ், ஒரு சோடி தங்கக் காதணிகள் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை சந்தேக நபர் ஹெட்டி வீதியில் உள்ள தங்க நகை கடைக்கு 169,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

பயணப்பை சடல விவகாரம்: பிரதான சந்தேக நபர் கைது; பெண்ணின் நகைகளும் கண்டுபிடிப்பு Reviewed by Author on November 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.