விண்வெளியில் நடைபயணம்: சாதனை படைத்த முதல் சீனப்பெண்
இதன்படி ‘தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஜாய் ஜிகாங், யே குவாங்பு ஆகிய இரு விண்வெளி வீரர்களுடன் வாங் யாப்பிங் என்கிற வீராங்கனையையும் சீனா கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் ‘தியான்ஹே' விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங்குடன் இணைந்து வீராங்கனை வாங் யாப்பிங் விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்டார். விண்வெளியில் நடப்பதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்த இருவரும் சுமார் 6½ மணி நேரம் விண்வெளி நடை பயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட முதல் சீன பெண் என்கிற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் வாங் யாப்பிங்.
விண்வெளியில் நடைபயணம்: சாதனை படைத்த முதல் சீனப்பெண்
Reviewed by Author
on
November 09, 2021
Rating:
No comments:
Post a Comment