அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் இன்று (22) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணியளவில் இடம்பெற்றது . 

 இக் கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை ஒழுங்கீனம், இளம்வயது திருமணம் மற்றும் கர்ப்பம், உடல் உள ரீதியான பிரச்சினைகள், பாடசாலை இடைவிலகல், விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், அறநெறி வகுப்புக்கள், போதைப் பொருள் பாவனை, சிறுவர் பாதுகாப்பு மேலும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளாக குடும்ப வன்முறை, குடும்ப பிரச்சனை, பெண் பிள்ளை பாதுகாப்பு மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவிகள் மேலும் கடந்த கால கூட்டக் குறிப்பின் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன. 

 இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ச் செயலாளர், மடு வலய உதவி கல்வி பணிப்பாளர், மாவட்ட வைத்தியர்கள், சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
                 








மன்னார் மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்! Reviewed by Author on April 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.