அண்மைய செய்திகள்

recent
-

17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் கிழக்கு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். செல்வநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அரநாதன் ரோஜா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் குறித்த பண்ணையை பராமரிப்பதற்காக அங்குள்ள வீட்டில் குடும்பம் ஒன்றை குடியமர்த்தியுள்ளார். 

இந்த நிலையில் அங்கு குடியிருந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு 6 மணியளவில் தனிமையில் இருந்துள்ள நிலையில் வீட்டின் மின்விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி விசாரணையின் பின்னர் இன்று பகல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை Reviewed by Author on April 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.