மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்?
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண உயர்வு தொடர்பில் அரசின் கொள்கை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் (30) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய மண்டலங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 2 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
P, Q, R, S, T, U, V, W ஆகிய பகுதிகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இரண்டு மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இதேவேளை, கொழும்பு வர்த்தக வலயத்தில் இன்று காலை 06.00 மணி முதல் இரவு 09.20 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்?
Reviewed by Author
on
April 30, 2022
Rating:
Reviewed by Author
on
April 30, 2022
Rating:


No comments:
Post a Comment