அண்மைய செய்திகள்

recent
-

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி சார்பாக கடந்த வருடம் இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு அதிகமாக பெற்று சாதனை படைத்த மாணவ மானவிகளை கெளரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(22) சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் ஏற்பாட்டி இடம் பெற்றது 

 குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் அதிபர் பரஞ்சோதி பாலபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.B.R. அஸ்லம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பழைய மாணவர்களான புனித அன்னை திரேசா பாடசாலையின் அதிபர் செபஸ்தியன் பிள்ளை விஜயன் அவர்களும் இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியளாலருமான அமிர்தலிங்கம் சிவதீபன் அவர்களும் கலந்து கொண்டனர் 

 குறித்த நிகழ்வின் போது புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மற்றும் விருந்தினர்கள் இலங்கை வங்கி மன்னார் கிளையில் இருந்து பள்ளிமுனை பிரதான வீதி வரை பாடசாலையின் மாணவர்களால் பேன்ட் வாத்திய முளக்கத்தோடு அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் அதனை தொடர்ந்து 2019,2020,2021 ஆண்டு காலப்பகுதியில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது குறித்த நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் விருந்தினர்கள் மற்று பழைய மணவர்களினால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. 


 































புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு Reviewed by Author on April 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.