மன்னாரில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தினால் இளைஞர்களுக்கான நல்லிணக்க செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு
4 வருடங்கள் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தினால் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் மற்றும் புதிய இளைஞர்கள் குழு ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக குறித்த அமர்வில் விரிவாக கலந்துரையாடப்பட்டது
குறித்த அமர்வில் தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதிகளான உவைஸ் மற்றும் மெடோசன் பெரேரா ஆகியோரும் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் மன்னார் நிகழ்சி திட்ட அதிகாரி ஜசோதரன் மற்றும் நான்கு மத தலைவர்கள் அருட்சகோதரிகள் மன்னார் சர்வ மத குழு அங்கத்தவர்கள் மற்றும் புதிதாக செயற்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட இளைஞர்குழுவினரும் கலந்து கொண்டனர்
குறித்த சர்வ மத குழு மற்றும் இளைஞர் குழுவின் ஊடாக கிராம ரீதியாக காணப்படும் மத ரீதியான பிரச்சினைகளை இனம் காணப்பட்டு அவற்றை தடுப்பதற்கான நடை முறை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகள் ,ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தினால் இளைஞர்களுக்கான நல்லிணக்க செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
April 22, 2022
Rating:

No comments:
Post a Comment