அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இடர் கால நிவாரண உதவி திட்டம் ஆரம்பித்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் இடர் கால நிவாரண உதவி திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் ஆரம்பித்து வைத்தார். முதல் கட்டமாக வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் வைத்து வைபவ ரீதியாக நூறு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு இடர் கால நிவாரணம் கடந்த சனிக்கிழமை (09) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் பல நூற்றுக்கணக்கான பின்தங்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 இந்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக 1200 குடும்பங்கள் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இடர் கால நிவாரண உதவியாக சுமார் 3500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கமைவாக மன்னாரில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டநிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









வவுனியாவில் இடர் கால நிவாரண உதவி திட்டம் ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on April 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.