ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; மசூதிக்கு சீல் வைக்க கோர்ட் உத்தரவு
இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மசூதியில் மூன்றாவது நாளாக இன்றும்(மே 16) வீடியோ பதிவுடன் ஆய்வு பணி நடந்தது. ஆய்வில் அனைத்து தரப்பினரும் திருப்தி அடைந்திருப்பதாக, மாவட்ட கலெக்டர் கவுசல் ராஜ் சர்மா தெரிவித்தார். இந்நிலையில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சில் வைக்க மாவட்ட கலெக்டருக்கு வாரணாசி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோர்ட் உத்தரவையடுத்து, அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நாளை(மே 17) விசாரணைக்கு வருகிறது
.
.
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; மசூதிக்கு சீல் வைக்க கோர்ட் உத்தரவு
Reviewed by Author
on
May 16, 2022
Rating:

No comments:
Post a Comment