அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு

முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமாகிய கனகையா தவராசா ஆகியோர் இன்று (16) மாலை
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதன் போது முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள் தற்போதய அரசியல் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார பிரச்சினை நீண்டகாலமாக மாறி மாறி வருகின்ற பேரினவாத அரசுகளும் திட்டமிடப்படாத பொருளாதாரத்தினை மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள்.


ஜே.ஆர்.ஜேயவர்த்தானா ஆட்சிக்கு வந்த பின்னர் திறந்த பொருளாதாரத்தினை கொண்டுவருவதாக சொல்லி ஆரம்பித்ததில் இருந்து அந்த நேரத்தில் ஒரு விடையம் விளங்கவில்லை இங்குள்ள மூன்று மொழிகளையும் பேசுகின்ற மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பது. மாறாக ஒரு சிறுபான்மையினரை போருக்கு அழைத்ததன் ஊடாக அவரின் திட்டம் தோல்வியில் அடைந்தது என்பது நாங்கள் அறிந்த விடையம் கடந்த காலங்களில் யுத்தத்தினை நோக்கிய கண்ணோட்டத்துடனான அரசுகள் மாறிமாறி வந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தினையே சிறுபான்மை மக்களின் பிரச்சினையினை தீர்ப்பதில் யாரும் காத்திரமான முடிவினை எடுக்கவில்லை வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்கு வருவதும் அதன் பின்னர் பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக செயற்படுவதும்தான் மாறி மாறி நடைபெற்று வந்துள்ளது. சிறந்த பொருளாதார திட்டம் எந்த அரசிடமும் இல்லை கடனை பெற்று கடனில் ஊழல் மூலம் இங்குள்ள அரசியல் வாதிகள் முதலீடாக கொண்டார்கள். 

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் ஆட்சிக்கு வருவதற்கு திட்டமிடப்பட்டசெயலா என்று பலரிடம் சந்தேகம் இருக்கின்றது. உரத்தினை நிறுத்தியமை ஆரம்பத்திலேயே தெரிந்துள்ளது டெலர் பிரச்சினை மிகப்பெரும் சூழ்நிலையினை ஏற்படுத்தப்பபோகின்றது என்று பகல் கனவினை கண்டுதான் செய்தார்கள். இலங்கை தீவு மிகவும் வளம்பொருந்திய நாடு நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை இல்லை எங்களை விட குறைந்த வளங்களை கொண்ட நாடுகள் எல்லாம் பணக்கார நாடுகளாக இருக்கின்றது. வளங்கள் அனைத்தும் இங்கு இருக்கின்றது நாங்கள் வளம் குறைந்தவர்களிடம் கையேந்தும் நிலைக்கு சென்றது இந்த பேரினவாத அரசியல்வாதிகள் தான். இன்று சிங்கள இளைஞர்களின் போராட்டம் என்பது காலத்தின் தேவை அவர்கள் கூறுவது அரசியல் மாற்றம் அல்ல இப்போது உள்ள நடைமுறை முற்றுமுழுதாக மாற்றப்படவேண்டும் அரசியல் சாசனம் மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. 

 இந்தியாவாக இருந்தாலும் மேற்கத்தேயை நாடுகளாக இருந்தாலும் சரி ரணில் வந்தால் அவர்களை ஒரளவு சமாளிக்ககூடிய திறன் இருக்கின்றது என்ற அடிப்படையில்தான் இரு பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கானதல்ல கடன் இன்னும் மேலதிகமான கடனினை பெற்றுக்கொள்வதற்கு இவரை பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில்தான். ரணில் ஒரு சிங்கள மேட்டுக்குடி குணம்சம் கொண்ட ஒருமனிதர்.சஜித்பிரரேமதாசா இந்த நாட்டினை தலைமைதாங்கக்கூடாதுஎன்பது மட்டுமல்ல இடதுசாரிகள் கையில் இந்தநாடு சென்றுவிடக்ககூடாது என்கின்ற விடையம் இது அவருக்கு மாத்திரமல்ல சர்வதேசத்திடமும் இருக்கின்றது. 

 எங்களுடைய தமிழ்தரப்பில் இருக்கின்ற தேசியஅரசியல் வாதிகள் என தங்களை கூறிக்கொள்கின்றவர்கள் நாட்டில் இந்த நிலமை நீடிக்குமாக இருந்தால் ஒருநாள் கோட்ட கோ...கோம் என்று சொல்கின்ற அரசியல் வாதி மறுநாள் ரணில் கம் கோம் என்கின்ற சூழ்நிலையினை ஏற்றுக்கொள்கின்ற ஒரோ நாளில் பல்ட்டி அடிக்கின்ற நிலைஇருக்கின்றது. தமிழ்மக்களின் தேவை என்ன பிரச்சினைகள் என்ன இந்த போராட்டத்தின் தன்மையினை புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கின்றேன் அவர்களும் இந்த மேட்டுக்குடி சிங்களவர்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தினை காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதில் நாங்கள் தவறு செய்வோமாக இருந்தால் இளைஞர்களால் எடுக்கப்பட்ட இந்த போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு இங்கே இருக்கின்ற தமிழ் தலைவர்கள் துணைபோவார்களாக இருந்தால் வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு பழியினை தமிழ்மக்கள் மீதும் இந்த தலைவர்கள் மீதும் கொண்டுவரும் என்பதில் அவதானமாக கொண்டிருக்கவேண்டும். 

 இன்று பலர் கூறுகின்றார்கள் ரணிலை ஆதரிக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள் அவர் 5 முறை பிரதமராக இருந்து ஆறாவது முறை பிரதமராக இருக்கின்றார் என்று கூறிக்கொள்பவவர்கள் அவர் 5 முறை பிரதமராக இருந்த ஒருவர் ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான் அதனை செய்யமுடியும் என்பது வேடிக்கையான விடையம். 5முறை பிரதமராக இருந்த ஒருவர் தமிழ்மக்களுக்கு எதுவும் செய்யவில்லை அவர்களின் போராட்டத்தினை அழிப்பதில் பங்களித்திருக்கின்றார்.

 நல்லாட்சி என்று கூறிக்கொண்டு அவர் வந்து அவருக்கு பின்னால் பலர் சென்று தமிழர்பிரச்சினையிiனை சிறிதளவும் நகர்த்த முடியாமல் தோல்வியடைந்த தமிழ் தலைமைகள் மீண்டும் ரணிலை கொண்டுவருவதன் மூலம் தமிழ்மக்களுக்கு ஏதாவது செய்துவிடமுடியம் என்று சொல்வது அவர்களின் சந்தர்ப்பவாத போக்கினைத்தான் நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இனியும் இவ்வாறான தலைமைகளை நாங்கள் பின்பற்றுவதாக என்பது இளைஞர் மட்டத்தில் சிந்திக்கவேண்டிய விடையம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் சிறந்த நாட்டினை உருவாக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளதோ அதேபோன்று எங்கள் இளைஞர்கள் மத்தியிலும் இதற்கான சரியான முடிவைதேர்ந்தெடுக்கவேண்டிய காலட்டம் இன்று இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு Reviewed by Author on May 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.