பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய !
இன்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றனர்.
இதற்கு முன்னர் பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவே மீண்டும் தெரிவாகியுள்ளார்.
திவாலாகும் நாட்டில் பல பிரச்சினைகள் இருந்தும், நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய !
Reviewed by Author
on
May 05, 2022
Rating:

No comments:
Post a Comment