யாழ். கரணவாய் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது
கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் இறுதிக் கிரியையகள் இன்று(05) இடம்பெற்றன.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். கரணவாய் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது
Reviewed by Author
on
May 05, 2022
Rating:

No comments:
Post a Comment