மாணிக்ககல் அகழ்வு – 5 பேர் கைது
மாவெலி வனப்பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மானிக்ககல் அகழ்வு தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் ஆல்டி தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாணிக்ககல் அகழ்வு – 5 பேர் கைது
Reviewed by Author
on
September 16, 2022
Rating:

No comments:
Post a Comment