உடலை கௌவிச்சென்ற முதலை; காணாமல் போனவரை தேடும் ஹூலந்தாவ மக்கள்
அதனைத் தொடர்ந்து மனித உடலைத் தேடும் முயற்சியை பிரதேச வாசிகள் நேற்று மாலை வரை முன்னெடுத்திருந்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
அந்த உடலில் காணப்பட்ட ஆடை கிராமத்திலிருந்து நேற்று மாலை முதல் காணாமற்போயிருந்த பழனிச்சாமி ஆறுமுகம் அணிந்திருந்த ஆடையுடன் ஒத்திருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான பழனிச்சாமி ஆறுமுகம் தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தவர். அதிலிருந்து கிடைக்கும் நாட்கூலி தமது இரண்டு பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்கு போதாமையால், அவர் மீன் பிடிப்பதையும் தனது தொழிலாக புதிதாக இணைத்துக்கொண்டிருந்தார்.
தோட்டத்தில் வேலை செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் கூலி வேலை செய்யவும் முடியாமற்போயுள்ளது.
தாய் இன்றி தவிக்கும் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக வேறு வழியின்றி 28ஆம் திகதி மாலை நில்வலா கங்கைக்கு சென்ற ஆறுமுகம் மீண்டும் வீடு திரும்பவில்லை.
உடலை கௌவிச்சென்ற முதலை; காணாமல் போனவரை தேடும் ஹூலந்தாவ மக்கள்
Reviewed by Author
on
September 30, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment