மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் 6 பேர் கைது.
அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் நானாட்டான பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அருகண்குண்டு பகுதியினைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரின் வீட்டில் இருந்து கொக்கேன் வகை போதைப்பொருள் 506 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்த வின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே,மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப.ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொக்கேன் போதை பொருளினை கைப்பற்றியும், அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணையில் நானாட்டான் அருகண்குண்டு பகுதியினை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரினை 506 கிராம் கொக்கேன் போதை பொருளுடன் கைப்பற்றி இன்றைய தினம்(19)மன்னார் மாவட்ட நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் 6 பேர் கைது.
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment