வவுனியாவில் யுவதி பலியான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் யுவதி பலியான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment