வறிய மாணவர்களுக்கு ஒரு நேர பால் வழங்கும் திட்டம் மடு வலயக்கல்வி பணிமனை பிரிவில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பித்து வைப்பு.
வடமாகாண ஆளுநர் நிதியின் கீழ் முன்னெடுக்கும் குறித்த செயல்திட்டத்தை மடு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மடு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 23 பாடசாலைகளைச் சேர்ந்த 1338 மாணவர்கள் குறித்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்வி பணிப்பாளர்,திணைக்கள அதிகாரிகள்,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வறிய மாணவர்களுக்கு ஒரு நேர பால் வழங்கும் திட்டம் மடு வலயக்கல்வி பணிமனை பிரிவில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment