உக்ரைன் போருக்கு ‘கிறிஸ்துமஸ் விடுமுறை?’
மைனஸ் டிகிரி பனியில் உறைந்திருக்கும் மக்களை மறைமுகமாக நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில், மின் உற்பத்தி, பகிர்மான மையங்கள் மற்றும் மின் தடங்களை ரஷ்ய ஏவுகணைகள் தகர்த்து வருகின்றன. இதனால் ஒரு புறம் போர் மறு புறம் குளிர் என உக்ரைன் மக்கள் தவித்து வருகின்றனர்.
போர் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் இருதரப்பினர் மத்தியிலும், கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதால், வீரர்களை மீளப் பெறுவதில் ரஷ்யா அக்கறை காட்டுகிறது.
இதையே சாக்கிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் முன்னேறியபோது ரஷ்யா பிடிகொடுக்கவில்லை. தனது ட்ரோன் தாக்குதல்களை உக்கிரமாக்கி உக்ரைனுக்கு உரிய பதில் தந்திருக்கிறது.
உக்ரைன் வீரர்கள்
ரஷ்யாவை சாந்தப்படுத்தும் மற்றொரு முயற்சியாக, ’கிறிஸ்துமஸை முன்னிட்டு ரஷ்யா இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக’ உக்ரைன் தகவல் பரப்பியது. சர்வதேச சமூகமும் இதனை முன்னிட்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்தன. எதிர்வினையாக நீண்ட மௌனமும், பின்னர் உறுதியான மறுப்பையும் வெளியிட்டிருக்கிறது ரஷ்யா. கிறிஸ்துமஸை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால், அந்த சிறு இடைவெளியை நீட்டித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு முயலலாம் என்பது உக்ரைனின் ராஜதந்திர நடவடிக்கையாக இருந்தது.
ஆனால் அதற்கு ரஷ்யா வாய்ப்பில்லாது செய்துவிட்டது.
மேற்கு நாடுகளின் ஆயுத உதவி தங்கு தடையின்றி கிடைப்பதால், ரஷ்யாவை எதிர்கொள்வதில் உக்ரைனுக்கு இப்போதைக்கு பிரச்சினையில்லை. ஆனால் ரஷ்ய தாக்குதலில் சிதிலமாகி வரும் தேசத்தை மீட்டெடுக்க உக்ரைனுக்கு ஒரு தலைமுறை தேவைப்படலாம் என்பதால், ரஷ்யாவை சமாதானப்படுத்தும் உத்திகளையும் உக்ரைன் அவ்வப்போது பரிசீலித்து வருகிறது. ஆனால் விடாக்கண்டனான ரஷ்யாவால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் உக்ரைனில் குண்டுகள் முழக்கம் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது
.
.
உக்ரைன் போருக்கு ‘கிறிஸ்துமஸ் விடுமுறை?’
Reviewed by Author
on
December 19, 2022
Rating:

No comments:
Post a Comment