அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீச்சர சிவராத்திரி திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு.

 சிவபூமி மன்னார் மாதோட்டத்தின் பாலாவிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மிகவும் பழமை வாய்ந்ததும்,  பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி திருவிழா 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வருகையோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



 கௌரி அம்பாள் உடனுறை கேதீச்சர நாதருக்கு   2023 வருடத்திற்கான மகா  சிவராத்திரி திருவிழா  திருக்கேதீச்சர ஆலயத்தில்    சனிக்கிழமை (18) காலை 5 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் அபிஷேகங்களுடன் ஆரம்பமாகியது.


பாவங்கள் போக்கும் பாலாவியில் நீராடி ஈசனுக்குத் தீர்த்தம் எடுப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.


காலை 8.மணி தொடக்கம் மகாலிங்க பெருமானுக்கு தீர்த்தக் காவடி எடுக்கப்பட்டது.


அத்துடன் மாலை 3 மணி முதல் விஷேட அபிஷேகமும் 4.30 மணிக்கு மகா பிரதோஷ கால பூஜையும் இதனைத் தொடர்ந்து ஆறு சாமப்பூசை அபிஷேகங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெற்று  மறுநாள் விசேட  வசந்த மண்டப அலங்கார பூஜையைத் தொடர்ந்து  பாலாவியில் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு  தீர்த்த உற்சவம் நடைபெறுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


விஷேட நிகழ்வாக அன்னதானம் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு சிறப்பு சமய சொற்பொழிவுகள் கலை நிகழ்வுகள் பாராயணம் ஓதுதல் போன்றவையும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



(மன்னார் நகர் நிருபர்)


(19-02-2023)










மன்னார் திருக்கேதீச்சர சிவராத்திரி திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு. Reviewed by NEWMANNAR on February 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.