மன்னாரில் நபர் ஒருவர் கொடூர கொலை
மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் சிலர் இணைந்து கொடுரமாக தாக்கியதில் எமில் நகரை சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதுடன் ஐவர் மன்னார் பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் வரை சென்று சமாதனப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு குறித்த இரு குடும்பத்தினருக்கு மீண்டும் பிரச்சினை இடம் பெற்ற நிலையில் முரண்பாடு முற்றிய நிலையில் பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார்
தாக்குதலில் காயம் அடைந்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் நபர் ஒருவர் கொடூர கொலை
Reviewed by NEWMANNAR
on
April 10, 2023
Rating:

No comments:
Post a Comment