மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
இணைந்த கரங்கள் அமைப்பின் பங்களிப்போடு மன்னார் மாவட்டத்தில் உள்ள பூமலர்ந்தான் பாடசாலையில் கல்வி கற்கும் தாய் தந்தையை இழந்த மற்றும் அதி கஸ்டத்தில் உள்ள (84) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உறவுகளினால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு மன்னார் பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மரிசால் விக்டர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.மோகன நந்தினி, ஆசிரியர்களான ஏ.எம். ஜெயசீலன், கே.ஆர். சந்திரமோகன், எல். புஸ்பராணி மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் மாணிக்கவள்ளி, கலைச் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், மா. ஜெயனாதன், தெ.சிருஸ்காந் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 10, 2023
Rating:

No comments:
Post a Comment