சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் பிரிவு உபசார நிகழ்வு
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபராக கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக கடமையாற்றிய அருட்சகோதரர் ரெஜினோல்ட் கல்முனை புனித கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபராக இடமாற்றம் பெற்று நாளை மறுதினம் பதவி ஏற்கவுள்ள நிலையில் அவருக்கான பிரிவு உபசார நிகழ்வு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் இடம் பெற்றது
கடந்த 2016 ஆம் ஆண்டு மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்ட அருட்சகோதரர் ரெஜினோல்ட் இதற்கு முன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி,அடம்பன் கல்லூரி போன்ற பாடசாலைகளில் அதிபராக பணியாற்றியிருந்தார்
இவருடைய காலப்பகுதியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை கல்வி,விளையாட்டு,இணைப்பாட வித செயற்பாடுகள் என மாவட்ட ரீதியாக பிரகாசித்ததுடன் கடந்த புலமைபரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்
அத்துடன் புலம் பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர்களை அந்த அந்த நாடுகளில் பழைய மாணவர் சங்கங்களை நிறுவுவதற்கான வழிகாட்டல்களை வழங்கியதுடன் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 வருட பூர்த்தி ஜூபிலியை முன்னிட்டு பழைய மாணவர்கள் ஊடாக 5 திறன் வகுப்பறைகளை நிறுவியதுடன் 150 ஆண்டு நினைவு முத்திரை,சவேரியன் வேக் போன்ற பல்வேறு நிகழ்சிகளை நடத்தி அதன் ஊடக பாடசலையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார்
இந்த நிலையில் நாளை மறுதினம் கல்முனை புனித கார்மேல் பற்றிமா பாடசாலை அதிபராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதுடன் கல்முனை பற்றிமா பாடசாலை அதிபராக கடமையாற்றிய அருட்சகோதரர் சந்தியோகு மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபராக கடமைகளை பெறுப்பேற்கவுள்ளார்
சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் பிரிவு உபசார நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
April 18, 2023
Rating:

No comments:
Post a Comment