அண்மைய செய்திகள்

recent
-

விமான கண்ணாடியில் விரிசல்- அவசரமாக கட்டுநாயக்க திரும்பிய Srilankan Airline விமானம்!

 விமானத்தில் விமானியின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரசமாக திரும்பிய விமானத்தில் பயணித்த பயணிகள் வேறு விமானங்கள் மூலம் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




189 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 225 நேற்று (07) பிற்பகல் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.



ஆனால் விமானம் புறப்பட்ட ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளது.



இந்த நிலை ஏற்பட்ட போது விமானம் இந்தியாவுக்கு அருகில் பறந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான கண்ணாடியில் விரிசல்- அவசரமாக கட்டுநாயக்க திரும்பிய Srilankan Airline விமானம்! Reviewed by NEWMANNAR on April 09, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.