மன்னார் மாற்றுத்திறனாளிகளை வைத்து வெளிநாடுகளில் இசை கச்சேரி நாடகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அம்பலம்
மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு என மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் இசை நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக விளம்பரங்கள் அன்மைகாலமாக வெளிவந்து கொண்டு உள்ள நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு ஆதாரபூர்வமாக உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
📸 Look at this post on Facebook https://www.facebook.com/share/v/erdH7v1Y9wcYdxQo/?mibextid=WC7FNe
அதே நேரம் குறித்த இசை நிகழ்ச்சிக்கு என மன்னார் மாவட்டத்தில் முன்னதாகவே மாற்றுத்திறனாளி அமைப்பு என்ற பெயரில் பல்வேறு நிதி மோசடி விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ள நபர் ஒருவரையும் குறித்த அமைப்பு லண்டனுக்கு அழைத்து கவுரவிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சி தொடர்பிலும் குறித்த நிகழ்ச்சியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் நபர் தொடர்பிலும் பல்வேறு தகவல் கோரிக்கைகள் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் குறித்த கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதை தாமதித்து வருவதுடன் அவருக்கும் குறித்த அமைப்பின் செயற்பாடுகளில் தொடர்பு இருக்கிறதா?
என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்
எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் குறித்த நிகழ்ச்சி தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேலும்
மன்னார் மாந்தை பகுதியை மையமாக கொண்டு இயங்கும் மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்த சிலர் மாற்றுத்திறனாளி. சமூகத்தினரின் அடையாளத்தை பயன்படுத்தி புலம்பெயர் உறவுகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பணம் பெற்று பல் வேறு மோசடிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில்
நியு மன்னார் ஊடகம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததுடன்
மாற்றுத்திறனாளி அமைப்புக்கு உதவிகளை வழங்குபவர்கள் நீங்கள் வழங்கும் உதவிகள் உரிய முறையில் உரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானமாக செயற்படவும் என்று கோரிக்கை விடுத்திருந்தது
பலமோசடிகள் நடைபெற்று இருப்பதை ,மாந்தை மேற்கை சேர்ந்த அமைப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எமக்கு தகவல் வழங்கி இருந்தனர் ஆதாரப்பூரமாக இருப்பினும் முழுமையாயாக தகவல் வெளியிடாமல் எச்சரிக்கை செய்திருந்தோம் ,, முன்னாள் "போராளி "என்ற பெயரை வைத்தது தொடந்து மோசடி வேலைகளை செய்துகொண்டிருப்பதை ,கடந்து செல்லமுடியாது ,
முழுமையாக தகவல்களை விரைவில் வெளியிடஉள்ளோம் ,
மேலும் இப்படியான ஒரு சிலரினால் புலம்பெயர்ந்த அமைப்புகள் கேடயமாக பயன்படுத்தப்படுகிறது
மாவீரனை நம்பலாம்
மண்ணுக்காக மடிந்தவன்,
ஆனால்
நான் முன்னாள் போராளி இல்லை ,
இப்பவும் போராளி தான் "
என்று சொல்பவரை நம்பாதே
No comments:
Post a Comment