விபத்தினை ஏற்படுத்தியபின் எடுத்த விபரீதமுடிவு
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சந்திரசேகரம் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடரில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பஸ்தர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment