பால் புரையேறி குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.
பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் 04 ஆம் திகதி சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பால் புரையேறி குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
Reviewed by Author
on
December 06, 2023
Rating:
No comments:
Post a Comment