வவுனியா - செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் (01.12) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதி செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் கணவன், மனைவி இருவரும் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது, 10,000 ரூபா பணமும் தங்க நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கும் இவ் இளைஞருக்கும் பல தொடர்வுகள் காணப்படுகிறது. அது தொடர்பிலும் விசாரணை நடைபெறுகிறது.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர் குற்றச்செயலின் போது அணிந்திருந்த ஆடைகளும் திருடப்பட்ட தங்க நகையும் பை ஒன்றில் மறைத்து வைத்து கிணற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment