அண்மைய செய்திகள்

recent
-

சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

 சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 19 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று(26.12.2023) இடம்பெற்றது.   

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.     

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது.   தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.  

நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராயா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள்,

பொதுஅமைப்புகள், கிராமமக்கள், சமூகஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.










சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது Reviewed by வன்னி on December 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.