நானாட்டான் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பிரதேச செயலாளர்
நானாட்டான் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பிரதேச செயலாளர்
----------------------------------------------------------- நானாட்டான் பிரதேச செயலாளராக இன்றைய தினம்(01.01.2024) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி கே. சிவசம்பு( இலங்கை நிர்வாக சேவை தரம் - 1) அவர்கள் உத்தியோகபூர்வமாக தனது பொறுப்புகளை இன்றைய தினம் 8 .45 மணியளவில் பிரதேச செயலகத்தில் செயலக உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலையிலும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. இவர் நானாட்டான் பிரதேச செயலகத்தின் 16 வதாக பொறுப்பேற்றிருக்கும் பிரதேச செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பிரதேச செயலாளர் அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம்.

No comments:
Post a Comment