அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ரீதியில் அனுராதபுரத்தில் இடம்பெற உள்ள 6 ஆவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மன்னார் அணி

 தேசிய ரீதியில் அனுராதபுரத்தில் இடம்பெற உள்ள 6 ஆவது  ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மன்னார் அணி



தேசிய ரீதியில்   அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில்  நாளைய தினம் (28) நடைபெற உள்ள ஆறாவது ரோல் போல் (ROLL BALL)  சாம்பியன்ஷிப்  போட்டியில் கலந்து கொள்ள மன்னாரில் இருந்து வீரர்கள் அனுராதபுரம் நோக்கி பயணித்துள்ளனர்.


இதற்கான முன்னாயத்த பயிற்சிகள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.  இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால்  உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அதிகளவான மன்னார் வீரர்கள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது


மேலும்  மன்னார் மாவட்டத்தில் ரோல் போல் (ROLL BALL)  விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து  பல நல்ல உள்ளங்களின் உதவிகளோடு இயங்கி வருகிறது.

 இந்த விளையாட்டை  சர்வ தேசமயமாக்க கூடிய சூழல் இருந்தும் அதற்கான வளங்கள் குறைவாக காணப்படுகிறது.

அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து  பலர் சர்வதேச விளையாட்டுகளில் பங்கு கொள்ளுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மாவட்ட ரீதியில் ரோல் போல் விளையாட்டு வீரர்களை சிறந்த முறையில் உருவாக்குவதற்கும் , அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுக்க முன்வரவேண்டும் என்று ரோல் போல்  (ROLL BALL) விளையாட்டு நிகழ்வின் நிர்வாகிகளால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.










தேசிய ரீதியில் அனுராதபுரத்தில் இடம்பெற உள்ள 6 ஆவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மன்னார் அணி Reviewed by வன்னி on January 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.