அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.

 மன்னார்  விடத்தல் தீவு கிராமத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறித்த கிராமத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை(4) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களம்,மாந்தை மேற்கு பிரதேச செயலகம்,பிரதேச சபை,பொலிஸார்,மற்றும் உள்ளூர் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணிகள்  பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டது.மேலும் குறித்த வீடுகளில் அடையாளம் காணப்பட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு,பிரதேச சபையின் உதவியுடன் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.


மேலும் ஒவ்வொரு வீடுகளும் முழுமையாக சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன்  அதிகாரிகள் இணைந்து பரிசோதனைகளை முன்னெடுத்ததோடு டெங்கு நுளம்பின் குடம்பிகள் உள்ளதா? என பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.


மேலும் விடத்தல்தீவில் உள்ள அதிகமான குடும்பங்கள் தமது வீடுகளை பூட்டி விட்டு மன்னார் தோட்டவெளி பகுதியில் வசித்து வருகின்றனர்.


கைவிடப்பட்ட காணிகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி உள்ளமையினால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் சுகாதார துறை அதிகாரிகளால் குறித்த காணி உரிமையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு,அவர்களுக்கு நோட்டீஸ் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

எதிர் வரும் 7 நாட்களுக்குள் அடையாளம் காணப்பட்ட காணிகள் துப்புரவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் பட்சத்தில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by வன்னி on January 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.