அண்மைய செய்திகள்

recent
-

யாழ் களஞ்சியசாலை தீ விபத்தில் சகோதர்கள் இருவர் உயிரிழப்பு!

 யாழ். பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று(02.01.2024) அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் தீவிபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



யாழ் களஞ்சியசாலை தீ விபத்தில் சகோதர்கள் இருவர் உயிரிழப்பு! Reviewed by வன்னி on January 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.