சிறப்பாக செயற்படும் உள்ளூர் உற்பத்தியாளர்
மிகவும் தரமானமுறையிலும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளுர் உற்பத்தியாளரான திருமதி ஜெனா அவர்களின்
விற்பனை மெம்படுத்தல் நிகழ்வில் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் உயர்திரு க. கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Good Life என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு தாயரிக்கப்படும் ஆரோக்கியமான தயாரிப்புக்களின் சிறந்த நனமதிப்பை பெற்று வளர்ந்து வரும் நிறுவனத்தின் 3வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்றையதினம் (6.01.2024) வாழ்வுதயம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் அவர்கள் இனறைய வாழ்க்கை முறையில் இவ்வகையான உற்பத்திகள் மிகவும் முக்கியமானது எனதும்,
இவ்வகையான தரமான உற்பத்திகளை ஊக்கப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் மாவட்ட செயலகம் மிகவும் உறுதுனையான செயற்படும் எனவும், தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட விற்பனையாளர்களை பாராட்டி பரிசில்களும் வழங்கி வைத்தார்,
இந்நிகழ்வில் மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாதா உத்தியோத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by வன்னி
on
January 07, 2024
Rating:











No comments:
Post a Comment