அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் இதுவரை எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உட்படவில்லை; பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.!

 தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் இதுவரை எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உட்படவில்லை; பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.!

கிழக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அம்பாறை சேனாநாயக்க சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து கரையோர பிரதேசங்கள் மற்றும் தாள்நில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளமை யாவரும் அறிந்ததே.

ஆனாலும் தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இதுவரைக்கும் எந்த வெள்ள அனர்த்தமோ பாதிப்புகளோ இதுவரைக்கும் ஏற்படவில்லை என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகிறோம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 


அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2014 இல் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில ஊடகங்களும் தனிப்பட்ட நபர்களும் பொறுப்பற்ற விதத்தில் மீளவும் பதிவிட்டு தற்போது ஏற்பட்ட அனர்த்தமாக காண்பிப்பதை அவதானிக்க முடிகிறது.


இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அத்தகைய வெள்ளப்பெருக்கின் பாதிப்பு இதுவரைக்கும் ஏற்படவில்லையென்றும் அவ்வாறு வெள்ள அனர்த்தம் ஏற்படுமிடத்து தென் கிழக்கு பல்கலைகழக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருப்பதனையும் உறுதி செய்வதாக பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


அத்துடன் ஒலுவில் வளாகத்தின் தாழ்நிலங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள அசையும் சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தென்கிழக்கு பல்கலைக்கழக வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தயவுசெய்து பதிவிட வேண்டாம் என மிகவும் தாழ்மையுண்டன் வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். 


(தற்போதய வளாகத்தின் சுமூகமான நிலை தொடர்பில் சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)











தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் இதுவரை எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உட்படவில்லை; பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்.! Reviewed by வன்னி on January 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.