அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு.

 மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய  இணைந்த கரங்கள் அமைப்பு.


இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக அவுஸ்ரேலியாவில் அமைந்திருக்கும் எக்ஸ்லன்ட் நிறுவன பணிப்பாளர் சௌந்தரராஜன் தெய்வநாயகம் மற்றும் அவரது குடும்பத்தாரின் நிதிப்பங்களிப்போடு தாய் தந்தையை இழந்த மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வளரும் 45 மாணவர்களுக்கு இன்று ச. சந்திரகுமார் ஹரி சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் அவர்களின் தலைமையில் கல்விக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் இணைந்த கரங்கள் அமைப்பினுடாக வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் ஹரி சிறுவர் இல்லத்தின் பொருளாளர் அ. குணசேகரம், உறுப்பினர் ஆர். முருகதாஸ் மற்றும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல்.கஜரூபன்,

கே.காந்தன், எம்.ஜெகனாதன், ஆர். தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்விற்கு முற்று முழுதான நிதி பங்களிப்பினை வழங்கிய சௌந்தரராஜன் தெய்வநாயகம் மற்றும் குடும்பத்தினர் கடந்த வருடமும் மட்டக்களப்பு தாந்தாமலை மக்களடியூற்று மக்களுக்காக இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக 07 லட்சம் ரூபாய் பெறுமதியில் குடிநீர் வசதியையும் வழங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு. Reviewed by வன்னி on January 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.