வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்து ; ஒருவர் காயம்
வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்து ஒருவர் காயம்.
வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (28.01.2024) காலை இடம்பெற்ற பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்து ; ஒருவர் காயம்
Reviewed by வன்னி
on
January 28, 2024
Rating:

No comments:
Post a Comment