அண்மைய செய்திகள்

recent
-

சாய்ந்தமருதில் சமாதான நீதவான்கள் ஒன்றியம்!

 சாய்ந்தமருதில் சமாதான நீதவான்கள் ஒன்றியம்!



நாட்டில் கௌரவ பதவிகளில் ஒன்றான சமாதான நீதவான்களாக திகழும் கனவான்களை உள்ளடக்கிய சமாதான நீதவான்கள் ஒன்றியம் சாய்ந்தமருதில் உதயமாகியது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய தேர்தால்கள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் வளவாளராக எம்.ஐ.எம். சதாத் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.


சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2024.01.06 ஆம் திகதி இடம்பெற்ற ஒன்றுகூடல் ஒன்றின்போதே குறித்த ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இங்கு சமாதான நீதவான்களின் பொறுப்புகள் அந்த பதவியின் கௌரவ தன்மைகள் அதன் வரலாறுகள் தொடர்பில் வெகுவாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் தலைவராக பொறியலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் செயலாளராக எம்.எம். உதுமாலெப்பை அவர்களும் பொருளாளராக யூ.கே. காலித்தீன் அவர்களும் உப தலைவராக எம்.எம். இஸ்மாயில் அவர்களும் உப செயலாளராக எம்.பி. நௌசாத் அவர்களும் காப்பாளராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களும் ஆலோசகர்களாக ஏ.எம்.இப்றாகிம் அவர்களும் எம்.ஐ.ஏ. ஜப்பார் ஆகியோரும் தெரிவாகினர்.

இங்கு சாய்ந்தமருதில் உள்ள சமாதான நீதவான்களை ஒன்றிணைப்பது தொடர்பிலும் அவர்களது கடமைகள் தொடர்பில் தொடராக ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.







சாய்ந்தமருதில் சமாதான நீதவான்கள் ஒன்றியம்! Reviewed by வன்னி on January 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.