15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவனால் யாழில் பரபரப்பு ,....
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவனால் யாழில் பரபரப்பு ,....
Reviewed by Author
on
February 21, 2024
Rating:
No comments:
Post a Comment