அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது

 மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் மூலம் 1472  Pregabalin   போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள்  மற்றும் ஒரு முச்சக்கர வண்டி என்பது கைப்பற்றப்பட்டுள்ளது. 


இந்த சம்பவமானது நேற்று  (13)  மதியம்   மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

வடமேற்கு கடற்படை கட்டளையினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள  கஜபா மற்றும்  மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடுதல்  நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


இந்த நடவடிக்கையில்   20  Pregabalin   கேப்சூல்கள் வைத்திருந்ததற்காக ஒருவர்  கைது செய்யப்பட்டார். 


சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட  போது  ஒரு வீட்டில் இருந்து 1432 Pregabalin காப்ஸ்யூல்கள் மற்றும் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து அதே மருந்தின் 20 காப்ஸ்யூல்கள் உடன் மேலும்  ஒருவரை கைது செய்துள்ளனர்.


இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த  28 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.





மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது Reviewed by வன்னி on February 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.