அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஆறு பேர் கைது!

 புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில்  ஆறு பேர் கைது!




யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்கள் இருப்பதகாக  5ம் வட்டாரம் இரணபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னந் தோட்டத்தில் இரகசியமாக தோண்டி எடுக்க முற்பட்ட  06 பேர் நேற்று (12-02-24)  அன்று  புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்


12.02.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் பி ஆர் ஹேரத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின்படி, இரணைப்பாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்  


புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் பி ஆர் ஹேரத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  பொறுப்பதிகாரி எம் பி ஆர் ஹேரத், பிரதீபன், ஜெனன்,  அபேரத்ன, ஜெயசூரிய, அருஸ் , மதுரங்க, விஜயரத்ன ஆகிய பொலிஸ் குழுவினரால்   அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த 06  பேரும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்  


குறித்த  இடத்தில் ஏற்கனவே தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழி தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்களும் அவர்களது சொத்துக்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாணைகள் இடம்பெற்றது  


நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இருவர் ,மாத்தறை  பகுதியை சேர்ந்த இருவர் மதவாச்சி,பதவிய, போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும்  13.02.2024 இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பதில் நீதிபதி ரி பரஞ்சோதி  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த ஆறு சந்தேக நபர்களும் எதிர்வரும்  .27.02.2024 வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.








புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஆறு பேர் கைது! Reviewed by வன்னி on February 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.