மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சமாசங்களுக்கு 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் குளிர்சாதனப் பெட்டிகள் கையளிப்பு-
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சமாசங்களுக்கு 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் குளிர்சாதனப் பெட்டிகள் கையளிப்பு-
இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா பங்கேற்பு.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் ,நானாட்டான் ,முசலி ,மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment