அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் : கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு

 திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் : கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு




இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.


இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.


திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.







திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் : கிழக்கு ஆளுநரிடம் யோசனையை முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு Reviewed by வன்னி on February 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.