உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்….” “ஏர் நிலம்”
“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்….”
“ஏர் நிலம்”
“ஏர் நிலம்” தொண்டமைப்பு சிறப்புடன் நடாத்திய
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற மகுட வாக்கோடு முல்லைத்தீவு கற்சிலைமடு ஒட்டுசுட்டான் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு வளாகத்தில் 2024.02.11 அன்று புலம்பெயர் உறவுகளில் பிரதான நிதி அனுசரணையாளர்களான
திரு.செ.தயாபரன் ஜெர்மன்,
திரு.ஆ.மோகன் கனடா,
திரு.து.லிங்கேஸ்வரன் சுவிட்சர்லாந்து ஆகியோருடன்
இணை நிதி அனுசரணையாளர்களாக…..
திரு.நா.இராமச்சந்திரன் சுவிட்சர்லாந்து,
திருமதி ம.கிருஸ்ணவேனி கொலண்ட். ஆகியோரின்
பங்களிப்புடன் நடைபெற்றது.
எமது வளத்தையும், எமது நிலத்தையும் பண்படுத்தி
“ உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர்…” என்ற ஐயன் வள்ளுவன் வாக்கிற்கமைய தொழிலால் பலருக்கு முன்னோடியாக விளங்கிய மூத்தோரை கனம் பண்ணுதல் நிகழ்வு இம்முறை 04ஆவது தடவையாக நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பிரதேச இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 மூத்த
தொழிளாள இணையர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இவ் விழாவை சிம்மக்குரலோன் அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் தலைமை ஏற்று நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நெறிப்படுத்தியிருந்தார்.
விருந்தினர்களாக வைத்தியகலாநிதி கைலாதநாதன் சுதர்சன்,”ஏர் நிலம்” அமைப்பின் ஆலோசகர் கலாநிதி க.சூரியகுமாரிஅதிபர், ,
திரு .கனகரத்தினம் பார்த்தீபன் சட்டவாளர், மற்றும் கமநல சேவை நிலைய குழுத்தலைவர் திரு.இ.வேதநாதன், ஒட்டுசுட்டான் கிராமசேவகர் திருவாட்டி. லலிதா நிவேகாந்தன், ஆயுள்வேத வைத்தியர் திரு.நாகமணி வன்னிய சிங்கம். கவிஞர்.திரு.யோ.புரட்சி, திரு.மடுத்தீன் அன்ரனி சதீஸ்குமார். கலந்து சிறப்பித்ததோடு பல்வேறு பாரம்பரிய அரங்க கலை நிகழ்வுகளான வில்லுப்பாட்டு குடமுழுக்கு கும்மி, கோலாட்டம் கவியரங்கம் என மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவை “ஏர் நிலம்” தொண்டமைப்பு நிறுவுனர் து.திலக் கிரி அவர்கள் புலம் பெயர் நாடான சுவிட்சர்லாந்தில் இருந்தவாறு நிதியாளர்களின் ஒன்றுசேர்ந்த அனுசரனையோடும் களத்துக்கும் புலத்துக்குமான இணைப்பாளர் திரு.நித்தி அவர்களின் ஒருங்கிணைப்புடனும்
சிறப்பாக ஒழுங்குபடுத்தி நிறைவாக்கிமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“நம்பிக்கை கொடுப்போம்
நம்பிக்கை கொடுப்போம்”
-ஏர் நிலம்-

No comments:
Post a Comment