அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவு!

 வடக்கில் வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவு!




வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.


வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று (06.02) இடம்பெற்றது.


இதன்போது வன்னி மாவட்டங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏற்ப்படுத்தப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தரபரீட்சைகளில் வடக்கு மாகாண மாணவர்களின் சித்தி விகிதங்கள் ஒப்பீடு செய்யப்பட்டதுடன்,  மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டது.


அத்துடன் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவு மட்டங்களே மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே, அவர்களை இனம்கண்டு அந்த மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தொடர்பாக அறிவுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டது.


நிகழ்வில் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,  வடக்கு மாகாண ஆளுனர் எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்  காயத்திரி அபேகுணசேகர, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.











வடக்கில் வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவுமட்டம் மிகவும் குறைவு! Reviewed by வன்னி on February 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.