மன்னா ரமேஷின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு,மோட்டார் சைக்கிள் மீட்பு!
கைது செய்யப்பட்ட மன்னா ரமேஷிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை யலகம பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தாக மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது .
குற்றப்பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்ட கைக்குண்டு அவரது வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மன்னா ரமேஷின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு,மோட்டார் சைக்கிள் மீட்பு!
Reviewed by Author
on
May 08, 2024
Rating:

No comments:
Post a Comment