கனடாவில் தமிழ் இளைஞர் செய்த தவறான செயலினால் பரபரப்பு
கனடாவில் சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகுதியை சேர்ந்த 20 வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
கடந்தாண்டில் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இதுவரை நீதிமன்றத்தினால் அவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.
சிறுமிகள் மீது தவறான நடத்தை
இது தொடர்பான தகவலை York பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகம்
இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவ்வாறானவர்கள் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment