மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வப்பொழுது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலப்பரப்பை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் குறித்த அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment