மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம் மன்னாரில் இன்று திங்கட்கிழமை (6) மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வானது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,ஈ.பி.ஈர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உற்பட பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு.
Reviewed by Author
on
May 06, 2024
Rating:

No comments:
Post a Comment