மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழை திருத்தப்பட்டது
வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட இருக்கின்றது
இன்று 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை எனவும் எனவே திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் உடனடியாக குறித்த பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிய பெயர் பலகை பொறிக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இந்நிலையில் குறித்த பெயர்ப்பலகை எழுத்துப்பிழை திருத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழை திருத்தப்பட்டது
Reviewed by Author
on
May 26, 2024
Rating:

No comments:
Post a Comment